Sri Ganesh Astro Services
8754408779,8754498588
Home
About Us
Astrology
numerology
Parikaram
Chevvaithosham
Compatibility
Awards & Rewards
Vital Points
Printing of Horoscope
Contact
செவ்வாய் தோஷம்
செவ்வாய் தோஷம் என்றால் "செவ்வாய்" கிரகத்திற்கு தோஷம் என்பதாகும். ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் "செவ்வாய் தோஷம்" என முத்திரை குத்திவிடுவார்கள். இது தவறு..
செவ்வாய்க்கு பகை கிரகமான, சனி , புதன் , ராகு , கேது தொடர்பு இருந்தால் செவ்வாய் தோஷம் என கருதலாம்.தனித்த செவ்வாய்க்கு தோஷம் கிடையாது.
பெண்களுக்கு மட்டும் செவ்வாய் தோஷம் ஏற்படும். ஆண்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை. ஏனென்றால் "செவ்வாய்" பெண்ணுக்கு கணவனாக கருதப்படுகிறது.
ஆணுக்கு "சுக்கிர" தோஷம் உண்டு.
எப்படி இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என ஜோதிட ஞானிகள் கீழ்க்கண்டவாறு விளக்கமாக கூறியுள்ளனர்
1.சிம்மம் / கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை.
2. ஜாதகத்தில் 2ம் இடம் மிதுனம் (அ ) கன்னி யானால் தோஷம் இல்லை..
3. ஜாதகத்தில் 4ம் இடம் மேஷம் / விருச்சிகமானால் தோஷம் இல்லை.
4. ஜாதகத்தில் 7ம் இடம் கடகம் / மகரமானால் தோஷம் இல்லை .
5. ஜாதகத்தில் 8ம் இடம் தனுசு / மீனமாக இருந்தால் தோஷம் இல்லை.
6. ஜாதகத்தில் 12ம் இடம் ரிஷிபம் / துலாமாக இருந்தால் தோஷம் இல்லை
7. செவ்வாய் - கும்பம் / சிம்மத்தில் இருந்தால் தோஷம் இல்லை .
8. குருவுடன் சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷம் இல்லை.
9. சந்திரன் / (அல்லது) புதனுடன் சேர்ந்தாலும் தோஷம் இல்லை ..
10. சூரியனுடன் சேர்ந்தாலும் / பார்த்தாலும் தோஷமில்லை .
11. செவ்வாய் 8ல் அல்லது 12ல் மேஷம், சிம்மம், விருச்சகம், மகர வீடுகளில் இருந்தால் தோஷம் இல்லை .
12. செவ்வாய் - சூரியன், சந்திரன், குரு அதாவது சிம்மம், கடகம், தனுசு, மீனம் ராசிகளில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை .
13. சுக்கிரன், செவ்வாய், களத்திரகார கிரகங்களாக இருப்பதால் ராகு / கேதுவுடன் சேர்ந்திருந்தால் மண வாழ்கை பாதிக்கப்படுகிறது
14. ஆண் (அ) பெண் ஜாதகத்தில். செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருப்பது கணவன் மனைவி அந்நோனியத்தைக் குறிக்கும் .
15. ஒருவருக்கு செவ்வாய் இருக்கும் ராசியில், மற்றவருக்கு சுக்கிரன் அல்லது குரு அமைவது மிக நன்று.
16. செவ்வாய் தோஷம் இருப்பினும், ஜாதகரின் உயிருக்கு ஆபத்தில்லை. குணபேதம் மட்டும் உண்டாகும் .
17. செவ்வாயுடன் ராகு / கேது / சனி / சேர்ந்து இருந்தால் எங்கு இருந்தாலும் தோஷம் தான்.
18. செவ்வாய் + ராகு, செவ்வாய் + கேது, உள்ள ஆண் பெண் ஜாதகங்களை இணைக்க கூடாது.