வரன் தேடுதல்
ஆண் ஜாதகத்தில் குரு நின்ற வீட்டிலிருந்து 7 வீட்டிற்குள் சுக்ரன் இருந்தால் திருமணத்திற்கு ஜாதகர் பெண்ணை தேடி போகவேண்டும். குரு நின்ற வீட்டிற்கு 7 வீட்டிற்கு மேல் சுக்ரன் இருந்தால் திருமணத்திற்கு பெண் வீட்டார் அவரை தேடி வருவார்கள். பெண்ணின் ஜாதகத்தில் சுக்ரன் நின்ற வீட்டிலிருந்து ஆறு ராசிக்குள் செவ்வாய் இருந்தால் திருமணத்திற்கு வரன் வீட்டார்கள் பெண் வீட்டாரை தேடி வருவார்கள். பெண் ஜாதகத்தில் சுக்ரன் நின்ற வீட்டிலிருந்து ஆறு வீட்டிற்கு மேல் செவ்வாய் இருந்தால் பெண் வீட்டார் வரன் வீட்டாரை தேடி செல்வார்கள்.
நல்ல வழி காட்டி தான் ஒரு ASTROLOGER (ஜோதிடர்). எல்லா சமயத்திற்கும், எல்லா பிரச்னைக்கும் ஒவ்வொருவர் ஜாதகத்திலும் ஜோதிடர் நல்ல வழிகாட்ட முடியும். ஜோதிடம் பொய்யல்ல. முன்னோர்கள் கோள்களை கூர்ந்து கவனித்து ஆராய்ந்து, கணித்த, அற்புத, அதிசய விஞ்ஞானம்
பரிகாரம்
லக்கினத்திற்கு 6-ல் சுக்ரன் இருந்தால் அவர்களின் பணம்/பொருளாதாரம் அடுத்தவர்களுக்கு போய்விடும் .கன்னியில் சுக்ரன் நீசம் அடைகிறார். சுக்ரனின், - -பணம், வெள்ளி, பொருளாதாரம் குறிக்கும். கன்னியில் சுக்ரன் இருப்பவர்கள் வெள்ளி நகை அணியக்கூடாது. காலபுருஷ லக்கினத்திற்கு 10-ல் குரு இருந்தால் அவர்கள் தங்க நகை அணியக்கூடாது. மகரத்தில் குரு நீசம் அடைகிறார். ஆகவே குரு நீசம் அடைந்தவர்கள் தங்க நகை அணியக்கூடாது. இதுவே பரிகாரமாகும்.
காதல்
சந்திரனின் வீடான கடகத்தில் அல்லது புதனின் வீடான மிதுனம், கன்னியில், சந்திரன் , புதன் சம்மந்தப்பட்டு இருந்தால் கண்டிப்பாக காதல் வலையில் விழுவார்கள் . பொதுவாக சந்திரன் வீடு அல்லது புதன் வீட்டில் கேது இருந்தால் அவர்கள் காதலில் ஈடுபடுவார்கள்.
பிறந்தஜாதகத்தில் ராசிக்க்கட்டத்தில் 4, 6, 8, 12 இல் சந்திரன் இருந்தால் சுய தொழிலில் லாபம் இருக்காது. இவரால் ஷேர் மார்க்கெட்டிலும் லாபம் பார்க்க முடியாது .தொழிலில் தோல்வி ஏற்படும். கவனம் .
புற்று நோய்
புற்றுநோய்க்கான காரக கிரகங்கள் சந்திரன், கேது , புதன் , செவ்வாய் ஆவார்கள். சிறு கிருமிகளை குறிப்பவரும் அதை அபிவிருத்தி செய்பவர் சந்திரன் ஆவார். புற்றை குறிப்பவர் கேது. புற்று நிலத்தில்தான் வளரும். நிலத்தை குறிக்கும் கிரகங்கள் புதன் மற்றும் செவ்வாய் ஆகும். ஒருவருக்கு புற்றுநோய் உள்ளதா எனப்பார்க்க சந்திரன் மற்றும் கேது இவர்கள் புதன் அல்லது செவ்வாய் வீட்டில் இருக்கவேண்டும் அல்லது தொடர்பு இருக்கவேண்டும். புற்றுநோய் எங்குவரும் என்றுபார்க்கும்போது , ஆறாம் வீட்டையும் அதில் உள்ளகிரகத்தையும் அதன் அதிபதியை வைத்து புற்றுநோய் வரும் உடல் பாகத்தை அறியலாம்.
கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன ?
ஒரு ஜாதகத்தில் ஜென்மலக்னம், ராசி அனைத்து கிரகங்களும் ராகு /கேது களுக்கு நடுவே அடை பட்டு இருந்தால், அந்த அமைப்பு கால சர்ப்ப தோஷம் எனப்படும் . இந்த அமைப்பில் ஓரிரு கிரகங்கள் ஆட்சி ,உச்சம் அடைந்திருந்தாலும் கூட அவை செயல்படுவதில்லை. தசா/புத்திகளும் நன்மைகள் செய்வதில்லை. இபப்டி உள்ள ஜாதகருக்கு முப்பத்தி இரண்டு வயதிற்கு மேல்தான் மேலான யோக பலன்கள் கிடைக்கும். அதுவரை பல தடைகள்/பிரச்னைகளை கடந்து வரவேண்டும் .
ஏழரை சனி என்றால் என்ன ?
கோச்சாரத்தில் சனியானவர் ஜாதகரின் ராசிக்கு 12, 1, இரண்டில் பயணிக்கும் காலம் ஏழரை சனியாகும். 12, இல் விரைய சனி, 1, இல் கண்ட சனி (ஜென்ம சனி) 2, இல் பாத சனி . வாழ்க்கையில் எல்லோருக்கும் 3, முறை ஏழரை சனி ஏற்படும் வாய்ப்பு உண்டு . முதல் முறை -- மங்கு சனி (கஷ்டம் /தொல்லை) இரண்டாம் முறை -- பொங்கு சனி (மேன்மை, முன்னேற்றம்) மூன்றாம் முறை -- மரண சனி (கண்டம்/ மரணம்) நான்காம் முறை -- மோட்ச சனி (மோட்ச பாக்கியம்)
செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?
செவ்வாய் தோஷம் என்றால் "செவ்வாய் "க்கு தோஷம் என்றாகும் . ஒருவர் ஜாதகத்தில் இரண்டு ,நான்கு ,ஏழு, 8 இருந்தால் "செவ்வாய் தோஷம் என முத்திரை குத்துகிறார்கள்,இது தவறு. செவ்வாய்க்கு பகை கிரகமான சனி,புதன், ராகு, கேது ,தொடர்பு இருந்தால் "செவ்வாய் தோஷம்" என கருதலாம்.தனித்த செவ்வாய்க்கு தோஷம் கிடையாது. ஆண்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை.பெண்களுக்கு மட்டும் செவ்வாய் தோஷம் உண்டு.என் என்றால் பெண்ணுக்கு "செவ்வாய் " கணவனாக கருதப்படுகிறது. ஆணுக்கு சுக்கிர தோஷம் உண்டு. செவ்வாயுடன் ராகு/கேது/சனி சேர்ந்து இருந்தால் எந்த ராசியில் இருந்தாலும் "தோஷம்" தான். செவ்வாய் தோஷத்தால் உயிருக்கு ஆபத்து இல்லை . குண மாற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன ?
ஒரு ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசி/லக்கினதிலிருந்து எட்டாம் வீட்டில் தற்போது சந்திரன் பயணிக்கும் இரண்டேகால் நாட்கள் "சந்திராஷ்டம" காலமாகும். சந்திராஷ்டம காலங்களில் உடல் நலம் பாதிக்கும், காரியத்தடை ஏற்படும், பொருள் விரயம் ஏற்படும்,சந்திராஷ்டமம் ராசிநாதனின் கோட்சரத்தால் சந்திராஷ்டம பலன்கள் மாறும்.
ஒரே ராசியில் சனியும் குருவும் !
தற்போது மகர ராசியில் சனி /குருவும் இணைந்து இருப்பார்கள் . இருபது வருடத்திற்கு ஒரு முறை இந்த இணைவு ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.தொழில் சிறக்கும்.பணியாளர்கள் ஒத்துழைப்பு நல்கும். ஒரு வருடத்திற்கு நல்ல பலன் நடக்கும் .
காதல் !!
புதன் வீட்டில் சந்திரன் இருந்து அல்லது சந்திரன் வீட்டில் புதன் இருந்து இவர்களுக்கு கேதுவின் தொடர்பு இருந்தால் காதலில் ஈடுபாடு ஏற்படும் . காதலிக்கும் முன் இருவர் ஜாதகத்திலும் ரஜ்ஜு /யோனி /வேதை பொருத்தம் உள்ளதா என பார்க்கவேண்டும். காதலில் தோல்வி வராது .
திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?
1. நட்சத்திர பொருத்தம் 2. கிரஹபொருத்தம் 3.ராசி பொருத்தம் 4.குழந்தை பாக்கியம் 5.களத்திர காரகர் பொருத்தம் 6.மாங்கல்ய தோஷம் 7.செவ்வாய் தோஷம் 8.ராகு /கேது தோஷம் 9.சனி தோஷம் 10.தாம்பத்ய உறவு ..என பார்க்க வேண்டும் .